மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு (அகில இலங்கை சமாதான நீதவான்) (ஓய்வுபெற்ற கிராம சேவகர்)

தோற்றம்: 23 மார்ச் 1946   -   மறைவு: 10 யூன் 2017

 

தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் சுதுமலை மற்றும் தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அகில இலங்கை சமாதான நீதவானும் ஓய்வு பெற்ற கிராம சேவகருமான(கந்தரோடை) கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 10/06/2017 (சனிக்கிழமை) மாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – இராசமலர் தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம் – அற்புதம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும், கலைவாணியின் பாசமிகு கணவரும், தயந்தன் (பொறியியலாளர் – சிங்கப்பூர்), நேசகோபன் (கணக்காளர் – கொழும்பு), அரவிந்தன் (பணிகள் தலைமை முகாமையாளர் மற்றும் விரிவுரையாளர் – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாமினியின் (நிர்வாக உத்தியோகத்தர்- சிங்கப்பூர்) அன்பு மாமனாரும், ஆகாஷியின் அன்புப்பேரனும், காலஞ்சென்ற தனபூபதி, காலஞ்சென்ற தனபாக்கியவதி (ஆசிரியர்), அகிலேஸ்வரி (பிரான்ஸ்), தனபாலசிங்கம் (கொழும்பு), ரஞ்சிதமலர் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், மகேந்திரன் (நில அளவையாளர்), காலஞ்சென்ற உமாமகேஸ்வரன் (நில அளவையாளர்) சிவனேஸ்வரி, ஜெயச்சந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், ஜெனித்தா (பிரான்ஸ்), ஜெனினா (பிரான்ஸ்), அஜிலியன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். டர்சனா, லுகர்னா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மகிந்த மலர்ச்சாலையில்(கல்கிசை) வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் இன்று (12/06/2017) திங்கட்கிழமை 3.00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கல்கிசை பொதுமயானத்துக்கு மாலை 4.30 மணியளவில் எடுத்துச்செல்லப்படும்.

தகவல்:

குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : (12/06/2017) திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில்
இடம் : மகிந்த மலர்ச்சாலை(கல்கிசை)
தகனம்
திகதி : (12/06/2017) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில்
இடம் : கல்கிசை பொதுமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0112 723570
கைப்பேசி : 077 9906199, 077 9371836, 077 9778907