வவுனியாவின் புதிய அரசாங்க அதிபராக பத்திரன பதவியேற்பு

வவுனியாவின் புதிய அரசாங்க அதிபராக பத்திரன பதவியேற்பு

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார்

இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ரோகன புஸ்பகுமார நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் பெற்று செல்லும் நிலையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ளார்

இந் நிலையில் வவுனியா மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக  மூன்றாவது முறையாகவும் பெரும்பான்மையினத்தவர் அரசாங்க அதிபராக பொறுப்பேற்கின்றமை குறிப்பிடத்தக்கது
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சமூகார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.