ஜனநாயக சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றிய நிர்வாகிகள் தெரிவு!

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பெயரை ஜனநாயக சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியம் என்று மாற்றம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் விசேட புனரமைப்பு கூட்டம் அதன் ஸ்தாபகத் தலைவர் இப்ரான்சா பௌமி தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு அக்கரைப்பற்றில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர். சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் தலைவராகவும் இப்ரான்சா பௌமி பொதுச் செயலாளராகவும் அஸ்லம் மௌலானா நிர்வாகச் செயலாளராகவும் சலீம் றமீஸ் பொருளாளராகவும் எம்.எப்.றிபாஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் கலாநிதி ஏ.எம்.ஜெஸீல், எஸ்.எல்.மன்சூர், ஏ.ஜீ.ஏ.கபூர் ஆகியோர் உப தலைவர்களாகவும் றபீக் பிர்தௌஸ் ஊடக இணைப்பாளராகவும் பீ.எம்.கே.ரஹ்மத்துல்லாஹ் கணக்காய்வாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது நடைமுறையிலுள்ள அமைப்பின் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டதுடன் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்