செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவாக பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

அதிசய உலகம்

BIG BOSS | Deleted Scence

மேலும்..

நிவாரணத்துக்கான பைத்துல் ஹெல்ப் அமைப்பின் அனுசரணையில்  முன்னாள் செனட்டர் மர்ஹும் மசூர் மௌலானாவின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு 300  மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மருதமுனை வெள்ளிச்சவீட்டு திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

எம். எச். றைசுல் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கௌரவ அதிதிகளாக செனட்டர் மர்ஹும் மசூர் மௌலானாவின் பிள்ளைகளான அக்ரம் மௌலானா, சியாம் மௌலானா, இல்ஹாம் மௌலானா, மபாஹிர் மௌலானா, நௌஸாத் மௌலானா மற்றும் பைத்துல் ஹெல்ப் அமைப்பின் ஆலோசகர் எப்.எம்.ஏ. அன்சார் மௌலானா, மேலும் பல அதிதிகள், ஊர்ப் பிரமுகர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆரிப் சம்சுதீன், சியாம் மௌலானா மற்றும் இல்ஹாம் மௌலானா ஆகியோர் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்