அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுகள் கையளிப்பு

அதிசய உலகம்

BIG BOSS | Deleted Scence

மேலும்..

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் வழங்கும் வைபவம் 12.01.2017 அன்று காலை மத்திய மாகாண விவசாய மீன்பிடி கால்நடை, தோட்ட உட்கட்டமைப்பு, இந்துக்கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

 

இதன் போது சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன. தற்போது புனர்நிர்மானம் செய்யப்பட்டு வரும் ஆலயத்துக்கு சீமெந்து தேவைப்படுவதாக ஆலய பரிபாலனசபையினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்தே இந்த சீமெந்துப் பைக்கற்றுக்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

 

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் அருள்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெகதீஸ்வரன் உட்பட ஆலய பரிபாலன சபையினர் என பலர் கலந்து கொண்டனர்.

(க.கிஷாந்தன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்