கனடாவில் ஆறு வருடங்களின் பின் இலங்கை தமிழர் விடுதலை

ஆறு ஆண்டுகளாக நீடிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனேடிய நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சன் சீ கப்பலின் ஊடாக சட்டவிரோதமாக ஆட்களை கனடாவுக்குள் கொண்டு வந்தார் என குணா ரொபின்சன் கிறிஸ்துராஜா உள்ளிட்ட பலரின் மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு வருடங்களின் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் புதிதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்க மறியலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2010ம் ஆண்டு தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமான முறையில் 492 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவை சென்றடைந்தனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய மூன்று பேரையும் குற்றமற்றவர்கள் என ஜூரிகள் சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்