2036இல் கனடிய சனத்தொகையில் அரைவாசி பேர் குடியேற்றவாசிகள்

2036ஆம் ஆண்டளவில் கனடாவின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் குடியேற்றவாசிகளாகவே காணப்படுவர் என ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சனத்தொகையில் 20 வீதமானோர் குடியேற்றவாசிகளின் குழந்தைகளாகவே காணப்படுவதுடன், நாட்டில் குடியேறும் குடியேற்றவாசிகளின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஆசியாவை சேர்ந்தவர்களாகக் காணப்படுவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவின் சனத்தொகையில் குடியேற்றவாசிகளின் வீதம் கடந்த 2011ஆம் ஆண்டு 20.7 வீதமாகக் காணப்பட்டது. இந்த எண்ணிக்கையானது எதிர்வரும் 2036ஆம் ஆண்டளவில் 30 வீதத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்