இன்றைய ராசிபலன்(16.02.2017)

மேஷம்

  • மேஷம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்ேயாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். ஓரளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சாதிக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சுவாதி நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • தனுசு

    தனுசு: புதிய யோசனைகள் பிறக்கும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். செல்வாக்குக் கூடும் நாள்.

  • மகரம்

    மகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். இனிமையான நாள்.

  • கும்பம்

    கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்த்தவை தாமதமாகும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். லேசாக தலை வலிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்