ஆஸி. – இலங்கை இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! (photo)

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..
ஆஸ்திரேலியா – இலங்கை இடையே நேற்றுப் புதன்கிழமை இரண்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டன.
அபிவிருத்தி ஒத்துழைப்பு, விளையாட்டு ஒத்துழைப்பு ஆகிய உடன்பாடுகளே இவ்வாறு எட்டப்பட்டன.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர்   ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தலைநகரான கான்பராவில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஆஸ்திரேலியப் பிரதமர்  மல்கம் ரேன்புல்லைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது இந்த இரு உடன்பாடுகளும் கைச்சாத்திடப்பட்டன.
அபிவிருத்தி உடன்பாட்டில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவும் ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் பிறைஸ் கட்சிசனும் கைச்சாத்திட்டனர்.
விளையாட்டு ஒத்துழைப்பு உடன்பாட்டில் இலங்கை சார்பில் விளையாட்டு
றை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், ஆஸ்திரேலியா சார்பில் விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சர் கிரேக் ஹண்ட்டும் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இந்த உடன்படிக்கைகள் உதவும் என இரு நாடுகளின் பிரதமர்களும் கருத்து வெளியிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்