வவுனியாவில் மோட்டார் சைக்கில் திருடியவர் கைது.

அதிசய உலகம்

Original bhakupali

மேலும்..

 

வவுனியாவில் இன்று (15) பிற்பகல் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருடைய மோட்டார் சைக்கிலைத் திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவரை போக்குவரத்துப் பொலிசார் இன்று (15) பிற்பகல் 2.30மணியளவில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியதற்காகவும் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாகவும் தெரிவித்து விசாரணைகள் மேற்கொண்டபோது குறித்த நபர் ஆசிரியர் ஒருவரின் சைக்கிளை தேக்கவத்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டபோது திருடிச் சென்றுள்ளதாக ஆசிரியர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து பொலிசார் தேடிக் கொண்டிருந்தபோதே மேற்படி நபரை போக்குவரத்துப் பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்