கேப்பாவிலவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம்

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..

கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்கள்  விமானகப்படையினரின் கட்டுப்பாட்டில் தங்களின் 524 ஏக்கா் சொந்த நிலத்தை தங்களிடம் கையளிக்க கோரி இன்று வெள்ளிக்கிழமை 18 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றாா்கள். இவா்களின் போராட்டத்திற்கு பல தரப்புகளும் தங்களின் தார்மீக ஆதரவை தெரிவித்து வரும் நிலையில்
இன்று  கிளிநொச்சி பொதுச் சந்தை வா்த்தகர்களும் கேப்பாவிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனா்.
காலை ஒன்பது மணி முதல் கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்