சமாதான வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகம் வெற்றி …

அதிசய உலகம்

Original bhakupali

மேலும்..

சமாதான வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகம் வெற்றி விவேகானந்தா விளையாட்டு கழக இளையோர் அணி மற்றும் லம்கோ விளையாட்டு கழக இளையோர் அணிகள் மோதிய சமாதான வெற்றிக்கிண்ண சினேக பூர்வ கடின பந்து கிரிக்கெட் போட்டி கடந்த (17)மாலை காரைதீவு கனகரெட்னம் அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லம்கோ விளையாட்டு கழகத்தினர் 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர் .105 என்கின்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா விளையாட்டு கழகத்தினர் 07 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது .துடுப்பாட்டத்தில் அனோஜன் 35 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்று கொடுத்தார். இறுதியாக வெற்றிக்கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. இப் போட்டிக்கு விவேகானந்தா மற்றும் லம்கோ விளையாட்டு கழக தலைவர் ,செயலாளர் உட்பட அணியின் சிரேஸ்ர உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்