VSC வசமானது விபுலானந்தரின் 125வது ஜனன தின ஞாபகார்த்த கிண்ணம்.

அதிசய உலகம்

Who loves this game ????

மேலும்..

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலானந்தா சனசமூக நிலையம் நடாத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடர் கடந்த (18) சனிக்கிழமை காரைதீவு கனகரெட்னம் அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.

இப் போட்டி தொடரில் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 07  (KSC-a,KSC-b,VCC,VSC-a,VSC-B,JKSC,Jalu) ஆகிய அணிகள் பங்குபற்றி இருந்தன.அதன் இறுதிப்போட்டிக்கு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் மற்றும் ஜலு கழகம் ஆகியன மோதி இருந்தன. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய ஜலு 05ஓவர்களில் 53 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.துடுப்பாட்டத்தில் பிரதீசன் 33ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பந்துவீச்சில் டினஸ்ரன் 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார். 54என்கின்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா விளையாட்டு கழகத்தினர் 3.1ஓவர்களில் 01விக்கட்டை இழந்து வெற்றிஇலக்கை அடைந்தனர்.

துடுப்பாட்டத்தில் கஜந்தன் 37ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இப் போட்டித்தொடரின் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது டினஸ்ரனுக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது அனோஜனுக்கும் மேலும் 2ம் இடத்தை பெற்ற ஜலு மற்றும் சம்பியன் பட்டம் வென்ற VSC அணிக்கான கிண்ணங்களை அதிதிகள் வழங்கி வைத்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்