தன் காதலியுடன் அரண்மனையில் குடியேறும் இளவரசர் ஹரி

அதிசய உலகம்

Who loves this game ????

மேலும்..

இளவரசர் ஹரி தன் காதலி மேகனை தன்னுடனே நிரந்தரமாக தங்க வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் பிரபல நடிகையான மேகனும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள்.

இருவருக்கும் திருமணம் வெகு விரைவில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லண்டனில் அமைந்திருக்கும் ராஜவம்சத்துக்கு சொந்தமான Kensington அரண்மனை குடியிருப்பில் தன் காதலி மேகனுடன் இளவரசர் ஹரி விரைவில் குடியேறுவார் என தெரியவந்துள்ளது.

தற்போது அந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதனுடன் ஹரியின் சகோதரர் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இதே அரண்மனைக்கு குடியேறுவார்கள் எனவும் தெரிகிறது.

சகோதரர்கள் இருவரும் அருகருகே வசிக்க விருப்பம் தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்