கனடாவிலுள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடத்தும் 13ஆவது சிறப்பு சர்வதேச மாநாடும், பேரவைக் கூட்டமும்

அதிசய உலகம்

Error in loading
மேலும்..

கனடாவிலுள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகமும், இயக்கத்தின் இலங்கை கிளையும் இணைந்து 2017 ஆகஸ்ட் 05,, 06 ஆம் திகதிகளில் நடத்தும் 13ஆவது சிறப்பு சர்வதேச மாநாடும், பேரவைக் கூட்டமும் தொடர்பான அறிவித்தல்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க கனடா தலைமையகமும், இயக்கத்தின் இலங்கை கிளையும் இணைந்து நடத்தும் 13ஆவது சிறப்பு சர்வதேச மாநாடும் பேரவைக் கூட்டமும் 2017 ஆகஸ்டு மாதம் 05 – 06 ஆம் திகதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைறெவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளுடன் யாழ்ப்பாண நகரம் விழாக்கோலம் பூண்டு வருகிறது.
கடந்த பல வருடங்களாக உலகின் பல நாடுகளிலும் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்து வெற்றிகரமாக செயற்பட்டுவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பல சர்வதேச மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் கடந்த காலங்களில் உலகின் பல நாடுகளிலும் நடத்தியுள்ளது. இன, மத வேறுபாடு இல்லாத கோட்பாடுகளை தனது தாராகமந்திரமாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் எமது இயக்கத்திற்கு உலகெங்கும் வாழும் பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலை இலக்கியவாதிகள், நிறுவனங்களில்ல் நிர்வாகப் பதவிகளை வகித்து வரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்Nறு துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்டவர்கள் என அனைத்து தரப்பினர்களினதும் ஆதரவும் ஆசியும் கிடைத்து வருகிறது.
இந்த மாபெரும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்தியக் கிளையின் மூத்த உறுப்பினர்களாக விளங்கும் மாநாட்டு தலைவர் முனைவர் பாஞ். இராமலிங்கம், இந்தியா கிளையின் தலைவர் திருமதி. மாலதி ராஜவேலு மற்றும் பல்வேறு நாடுகளின் கிளை உறுப்பினர்கள் என அனைவருமாக இணைந்து தீவிரமாக உழைத்து வருகின்றார்கள்.
மேலும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க இலங்கை அரசாங்கமும் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள், அவை உறுப்பினர்கள் எனச் சகலரும் ஆக்கபூர்வமான ஆதரவுகளை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இம்மாநாட்டில் பல மத்திய மற்றும் ஏனைய மாகாண முதல்வர்களும், அமைச்சர்களும், அவை உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்க இருப்பதும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமையவுள்ளது.
மேலும் மேற்படி மாநாட்டில் இந்தியாவிலிருந்தும் பல பிரமுகர்களும் தமிழ் அறிஞர்களும் வருகை தரவிருப்பது மகிழ்ச்சிதரும் விடயமாகும். அத்துடன் இம்மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளமையும் சிறப்பு அம்சமாகும். எமது தாயகத்தில் இறுதி யுத்தத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீள முடியாமல் தவிக்கும் எமது மக்களின் புண்களுக்கு சிறிதேனும் தைலத்தை தடவும் ஒரு முயற்சியாகவும் இந்த மாநாடு அமைய வேண்டும் என்ற நோக்கோடு இம்மகாநாட்டை இலங்கையில் நடத்த தலைமைகம் தீர்மானித்தது.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த இரண்டு நாள் மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் சிறப்பாகச் செய்து வரும் குழுவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் திரு. வி. சு துரைராஜா அவர்களும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு. துரை கணேசலிங்கம் அவர்களும் மற்றும் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக இருந்துவரும் திரு. இ. இராஜசூரியர் அவர்களும் முக்கிய பொறுப்புக்களை ஏற்று செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு ஒத்தாசையாக இயக்கத்தின் சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளர் கனடா வாழ் திரு. ஆர். என். லோககந்திரலிங்கம் அவர்களும் இலங்கை மாநாடு தொடர்பான ஊடகச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக விளங்கும் திரு. தே. செந்தில்வேலவர் அவர்களும் செயற்பட்டு வருகின்றார்.
கடந்த ஆண்டு 2016 இல் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு ஒரு ஆரோக்கியமான ஆரம்பமாக இந்திய மண்ணின் புதுவை மாநிலத்தில் உள்ள பாண்டிச்சேரி தலைநகரில் நடைபெற்ற இரணடு; நாள் மாநாடு இயக்கத்தின் சர்வதேச உறுப்பினர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும் ஒரு செயற்பாடாக அமைந்தது. உலகில் தமிழ் மொழியினதும் தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டினதும் காவல் தெய்வங்களாக விளங்கும் இந்திய தேசமும் தமிழ்நாடு என்னும் எமது தாய்த் தமிழகமும் அமைந்துள்ள இந்திய மண்ணில் தமிழ் மொழியின் நறுமணம் கமழும் பாண்டிச்சேரியில் எமது இயக்கத்தின் அகிலத்து அங்கத்தவர்களும் அறிஞர்களும் கூடிப் பேசி ஆராய்ந்து நல்ல பல திட்டங்களை அறிமுகம் செய்யக் கிடைத்த அந்த அரிய சந்தர்ப்பம் எம்மை பெருமடங்கு உயரத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு ஊக்கியாக அமைந்திருந்தது என்றே கூற வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 2017 ஆகஸ்ட் மாதம் 05 – 06 ஆம் திகதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறவுள்ள கருத்தரங்கு கலையரங்கு மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பேரவை மாநாடு மற்றும சந்திப்புக்கள் தொடர்பான விபரங்களுக்கு imtc1974@yahoo.com / raja@cfsginc.com /panchramalingam@gmail.com / velavar@yahoo.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளோடு தொடர்பு கொள்ளலாம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்