தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைக்கு மத்தியில் புத்தாண்டு மலர்கிறது..

அதிசய உலகம்

next........

மேலும்..

ஸ்ரீலங்காவின் அனைத்து மக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான எதிர்ப்பார்ப்புக்களை ஏற்படுத்தியவாறு புதிய ஏவிளம்பி புத்தாண்டு இன்று நள்ளிரவு மலர்கின்றது.

வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், ஒரு சில பகுதிகளில் புத்தாண்டுக்கான ஏற்பாடுகள் இன்றைய தினம் பரபரப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏவிளம்பி வருடத்திலாவது நாட்டின் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிட்டுமா என்ற எதிர்பார்ப்புக்கள் மேலோங்கியுள்ள நிலையில், புத்தாண்டு மலர்கின்ற சூழலில் மக்கள் பாரிய நம்பிக்கையுடன் தீர்வுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென கடந்த துர்முகி வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட போதும், வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அவ்வாறே நீடிக்கின்றன.

கடந்த வருடத்தில் மக்கள் நீதிக்காக போராட்டங்களை நடத்திய நிலையிலும் நீதிக்காக தொடர்ந்து வீதிகளில் காத்திருந்த நிலையிலும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அந்தளவுக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் இழுத்தடிப்புக்களும் பின்னடைவுகளுமே காணப்பட்டன.

இந்த நிலையில், நீதி கோரி நிற்கின்ற பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் பாரிய அவதானிப்புக்களுக்கிடையிலும் ஏவிளிம்பி புத்தாண்டு மலர்கின்றது.

எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறம் தமது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா, மட்டக்களப்பு, மலையகம் போன்ற பகுதிகளிலுள்ள வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டமும் அதிகரித்தே காணப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்