இன்றைய ராசிபலன் 18.04.2017

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். விலகிச் சென்ற உற வினர்கள் வலிய வந்து பேசு வார்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.
ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மிதுனம்

மிதுனம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.
கடகம்

கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
சிம்மம்

சிம்மம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர் கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத் தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்

துலாம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியா பாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பூராடம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். உத்யோகத்தில் மறதி யால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
மகரம்

மகரம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகை யில் அலைச்சல் உண்டு. அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல்கள் வரும். போராடி வெல்லும் நாள்.
கும்பம்

கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். செல்வாக்குக் கூடும் நாள்.
மீனம்

மீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல் படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்