மீதொட்டமுல்ல அனர்த்தம்: ரணிலிடம் வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு (photos)

அதிசய உலகம்

next........

மேலும்..
மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பாக இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவனும், வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் பு டொங்கும் தெரிவித்துள்ளனர்.
இந்த உணர்வுபூர்வமான சந்தர்ப்பத்தில் வியட்நாம் மக்களும், அரசும் தமது உள்ளங்களால் இலங்கையுடன் ஒன்றாக இணைந்திருப்பதாக வியட்நாம் ஜனாதிபதியும், கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும்  இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறானதோர் அனர்த்தம் எதிர்காலத்தில் ஏற்படாமலிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏதாவது உதவிகள் தேவைப்படின் அதனை வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவிக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும் முன்வந்தமை தொடர்பாக அவர்களுக்கு இலங்கை மக்கள் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்ல அனர்த்தம் காரணமாக தனதுவியட்நாம் விஜயத்தை சுருக்கிக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விஜயத்தின் நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் பலவற்றை இரத்துச் செய்துவிட்டு, இன்று புதன்கிழமை  முற்பகல் நாடு திரும்புகின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்