வடகொரியாவின் மீது பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் ஏற்படுத்தப்படும்: மைக் பென்ஸ்

அதிசய உலகம்

next........

மேலும்..

வடகொரியாவின் மீது பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் சீனாவுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடகொரியாவினால் தாக்குதல் மேற்கொள்ளப்படுமேயானால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் யொகோசுகா துறைமுகத்தில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க ரொனால்ட் ரீகன் விமானத்தை பார்வையிடும் பொருட்டு சென்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா, தனது அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்