நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருது நிகழ்வு, இரவு விருந்துபசாரம், மனித உரிமைகள் கருத்தரங்க மாநாடு

அதிசய உலகம்

Error in loading
மேலும்..
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த ‘மனித உரிமைகள் கருத்தரங்க மாநாடு’ மற்றும் ‘இரவு விருந்துபசாரநிகழ்வு’ ஆகியவற்றுடன் நாடுகடந்த அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் நிகழ்வும் இவ்வார இறுதியில் நடை பெறவுள்ளன.  நூற்றுக்கணக்கான கனடியர்களும் கூடவே வெளிநாட்டிருந்து வரும் விருந்தினர்களும் இணைந்து கலந்து கொள்ளும் வருடாந்த விருந்துபசார மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு 22ந்திகதி சனிக்கிழமை ஸ்காபரோ கொன்வென்சன் சென்ரறில் ( Scarborough Convention Centre, 20 Torham  Pl, Scarborough ) மாலை 5:30 மணிக்கு வரவேற்பு மற்றும் 6:30 மணிக்கு இரவு விருந்துபசாரத்துடன் ஆரம்பமாகும். விழாவின் சிறப்பு நிகழ்வாக  தந்தை செல்வா ஞாபகார்த்த விருது,  நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த விருது,  மாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த விருது ஆகியவை வழங்கப்படவுள்ளன.
மறுதினம்  23ந்திகதி ஞாயிற்றுக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த கருத்தரங்க மாநாடு  “இலங்கையின் நீதிப்பொறிமுறை மாற்றம்“ எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது. ஸ்காபரோ டெல்டா ஹொட்டலில் (Delta Hotel, Kennedy Rd, Scarborough) காலை 9:00 மணிமுதல் மதியம் 12:00 வரை நடைபெறவுள்ள இக் கருத்தரங்க மாநாட்டில் “தமிழ் மக்களின் நீதி கோரிய போராட்டத்தில் தற்போது எதிர்நோக்கப்படும் நீதிப் பொறிமுறை குறித்து பல்வேறு நிலைகளில் ஆராயப்படும்” எனவும், “தமிழீழ ஆர்வலர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்” எனவும்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த மாநாடு மற்றும் விருந்துபசார ஏற்பாட்டுக்குழு.  நிகழ்வுகள் குறித்த ‌மேலதிக விபரங்களுக்கு சாந்தினி சிவராமன் அவர்களுடன் 416-830-4305 என்ற தொலைபேசி அல்லது shanthinisivaraman01@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்