எப்படியோ ஒரு வழியாக விஜய்யும் சாதனை பட்டியலில் வந்துவிட்டார்- ரசிகர்கள் கொண்டாட்டம்

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய் இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தொடர்ச்சியாக விஜய் டுவிட் செய்ய மாட்டார், இதனாலேயே அவரின் பாலோவர்ஸ் அளவு குறைந்தெ இருந்தது.

இதுவரை வெறும் 389 டுவிட் மட்டுமே செய்திருக்கும் விஜய்யை தற்போது 1 மில்லியன் நபர்கள் பாலோ செய்துள்ளனர்.

இதை அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். விஜய் கடைசியாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக ஜனவரி 17ம் தேதி டுவிட் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்