சடுதியாக மயங்கி விழுந்து கர்ப்பவதி மரணம் கிளிநொச்சியில் சம்பவம்!

அதிசய உலகம்

Error in loading
மேலும்..
நேற்று மாலை 4.15 மணியளவில் கிராமத்தில் சமுர்த்திக் கூட்டத்திற்குச்  சென்றுகொண்டிருக்கும்போது மூன்று பிள்ளைகளது தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி  விழுந்துள்ளார்
அவரது உறவினர்களும் அயலவர்களும் அவரை வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றபோதிலும் தருமபுரம் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவரது உயிர்பிரிந்துவிட்டது.
இச் சம்பவம் கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இவர் இறக்கும்போது கர்ப்பவதியாக இருந்தமையால் சட்டவைத்திய விசேட வைத்திய நிபுணர் பிரேதபரிசோதனையை மேற்கொள்வது அவசியம் ஆதலின் இவரது பூதஉடல் அனுராதபுர வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டு சென்று வருவதற்கான போக்குவரவுச் செலவீனங்களைச் சுகாதாரத் திணைக்களமே பொறுப்பேற்றுள்ளது.
எஸ்.என்.நிபோஜன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்