8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமா?

அதிசய உலகம்

funny guy

மேலும்..

 

போன் செய்வதற்கும், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதற்கும் மட்டுமே பயன்பட்டு கொண்டிருந்த மொபைல்  தற்போது ஸ்மார்ட்போன்களாக மாறி ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் செய்யும் அனைத்து வேலைகளையும் அதைவிட எளிமையாக , விரைவாக செய்து முடிக்கின்றன

தற்போது நாம் அனைவரும் ஸ்மார்ட்போனை பில் கட்ட, தியேட்டர் டிக்கெட் வாங்க, வங்கி பரிவர்த்தனை செய்ய, உணவு ஆர்டர் செய்ய என எத்தனையோ வகையாக பணிகளை செய்து கொள்கிறோம். ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் அதற்கேற்ற வகையில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை தயார் செய்து வாடிக்கையாளர்களை திருப்தி செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த அதிகப்படியான பயன்களுக்கு நம்முடைய ஸ்மார்ட்போனில் அதிக ரேம் கெப்பாசிட்டி இருக்க வேண்டும் என்பது முக்கியம். அப்போதுதான் ஸ்மார்ட்போன் மிக வேகமாக செயல்படும். அந்த வகையில் தற்போது சாம்சங், HTC, ஒன்ப்ளஸ், சியாமி போன்ற முன்னணி நிறுவனங்கள் 6GB ரேம் கொண்ட போன்களை தயாரித்து அறிமுகம் செய்து வருகின்றன.

ஆண்ட்ராய்டு ஒ : என்ன பெயர்.? எப்போது வெளியீடு.? என்னென்ன புதிய அம்சங்கள்.?

ஆனால் ரேம் ரேஸ் இன்னும் முடிவடையவில்லை. அடுத்தகட்டமாக 8GB ரேம் குறித்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் யோசிக்க தொடங்கிவிட்டன. ஆசஸ் நிறுவனம் உலகின் முதல் 8GB ரேம் போனை ஏற்கனவே அறிமுகம் செய்து பிள்ளையார் சுழி போட்டுவிட்டது. இந்நிலையில் 2017-2018ஆம் ஆண்டுகளில் 8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்