இலங்கை – இந்திய வலுவான உறவுக்கு வழிவகுக்கும் விஜயம்! – மோடி பெருமிதம் 

அதிசய உலகம்

funny guy

மேலும்..
இலங்கைக்கான தனது விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வலுவான உறவுகளை வெளிப்படுத்துகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
தனது ருவிட்டர் தளத்தில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இரண்டுநாள் விஜயமாக நான் இலங்கை செல்கின்றேன். இரண்டு வருட காலப்பகுதியில் நான் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள இரண்டாவது விஜயம் இது.  இந்த விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை வெளிப்படுத்துகின்றன.
எனது விஜயத்தின்போது நான் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வுகளில் பங்கேற்பேன். அந்த நிகழ்வின்போது நான் பௌத்த மதத் தலைவர்கள், அறிஞர்களுடன் கலந்துரையாடுவேன்.
இலங்கைக்கான எனது விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ள பௌத்த பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துகின்றது.
இலங்கை – இந்திய ஆகிய நாடுகள் மத்தியிலான இணைப்பில் இது ஒரு முக்கியமான விடயமாகும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்