SVO இன் ஏற்பாட்டில் சர்வதேச அன்னையர் தின கௌரவிப்பு விழா -2017

SVO இன் ஏற்பாட்டில் சக்தி சனசமூக நிலையம், திருக்கோயில் பிரதேச இளைஞர் மேம்பாட்டு ஒன்றியமும் இணைந்து நடாத்திய சர்வதேச அன்னையர் தின கௌரவிப்பு விழாவானது நேற்று (14.05.2017) SVO இன் ஸ்தாபகர் பி.நந்தபாலு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ K.துரைராஜசிங்கம் அவர்கள் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.G.சிறிநேசன் அவர்கள் விஷேட அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் மற்றும் உத்தியோகஸ்தர்களும், அன்னையர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்