இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?

இளம் சினிமா ரசிகர்களின் நாடிதுடிப்பை அறிந்து இசையமைப்பதில் வல்லவர் அனிருத். இன்றைய டிரண்டிற்கு ஏற்றார் போல் தன்னுடைய இசையில் அசத்துவார்.

தற்போது இவரது இசையில் அஜித்தின் விவேகம் படம் தயாராகி இருக்கிறது. இப்பட பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது இவரது இசையில் இவ்வருடம் மட்டும் நான்கு படங்கள் வெளியாகிறதாம். விவேகம், தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன், தெலுங்கில் பவன் கல்யாண் படம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்