பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவது தொடர்பில் அக்கறை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளின் போது, பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவது தொடர்பிலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் (Nicola Sturgeon) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய போது, “பிரெக்சிற்றின் இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது தொடர்பிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன்” என  தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் ஃபெலோன் (Michael Fallon), “பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு சுமார் 50 மில்லியன் பவுண்களை பிரித்தானியா செலவு செய்கின்றது. இருப்பினும், சுகாதார சேவைக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்