VSC இனால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணகி அறநெறிப்பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை நிகழ்வு.

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

விவேகானந்தா விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணகி அறநெறிப்பாடசாலையில் இன்று (15.05.2017) திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை நிகழ்வானது கழக செயலாளர் கோ.உமாரமணன் தலைமையில் கழக தலமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருமதி.சத்தியவதி சாந்தலிங்கம் (ஓய்வுபெற் முகாமைத்துவ உதவியாளர்) அவர்களும், கௌரவ அதிதியாக திருமதி.சுஜித்ரா சதிஸ்ராஜ் (இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் போது சுவாமிக்கான பூசைவழிபாடும் அதனைதொடர்ந்து மாணவர்களினால் வரவேற்பு நடனம், சுவாமியினைப்பற்றிய சொற்பொழிவும் நிகழ்த்தபட்டது.இறுதியாக ஆசிரியர் ஜெயரதி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்