திருகோணமலை தோப்பூர் செல்வநகரில் பதற்றம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இன்று அவசரக் கூட்டம்.

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் செல்வ நகர் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை(16) மாலை அப்பகுதியில் அமைந்துள்ள  பௌத்த விகாரையின் மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய வெளி இடங்களில் இருந்து வந்த காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும் செல்வ நகர் பகுதியில்   பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. பௌத்த விகாரைப்  பகுதியில் இருந்து முஸ்லிம் பிரதேசத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டுள்ளன. இது பற்றி அப்பகுதி மக்களால் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுவரப்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் நேற்று செவ்வாய்கிழமை வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள திருகோணமலை வந்திருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன அவர்களை நேரடியாக சந்தித்து அவரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு. அமைச்சர் ருவன் விஜயவர்த்தன அவர்களால் அங்கிருந்து மாவட்டத்தின் பொலிஸ்,முப்படைகளின் அதிகாரிகளுக்கு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பாக ஆளுநர்,அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டதை அடுத்து இது சம்பந்தமான விசேட கூட்டமொன்று இன்று புதன்கிழமை (17)  காலை 9.30 க்கு  ஆளுனரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுவதாகவும் இதனால் அப்பகுதி பெண்கள் அல் ஹுதா பள்ளிவாயளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும்  ஆண்கள் பொது இடங்களில்  பாதுகாப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
குறித்த விடயம் தொடர்பாக கேள்விவுற்ற திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் போன்றோர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்புடன் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடினர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்