உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று மீட்பு.

அதிசய உலகம்

famers Struggle

மேலும்..

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்.கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று 17.05.2017 அன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தைக் குட்டி 17.05.2017 அன்று காலை அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்.கிளாயர் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த வேளையில் வாகனமொன்றில் மோதுண்டுள்ளது. இதனைக் கண்ட பிரதேவாசிகள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுத்தையை மீட்டு தலவாக்கலை கால்நடை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதுடன், இது குறித்து மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல்களை வழங்கியுள்ளனர்.

குறித்த சிறுத்தை குட்டியை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்கவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைகாலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதாக தெரிவித்திருந்த நிலையில் 17.05.2017 அன்றைய தினம் சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்