கால நியமத்தை அடிப்படையாகக் கொண்டு மின்கட்டண அறவீட்டு முறையொன்று அறிமுகம்.

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

வீட்டு மின் பாவணைகளின் மின் நுகர்வு காலநியமத்தை அடிப்படையாகக் கொண்டு, மின்கட்டண அறவீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார சபை என்பன ஒன்றிணைந்து இந்த தீர்மானத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனைகளுக்கு அமைய பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதற்கமைய, மின்சார பாவனை கால நேரத்துக்கு அமைய, இரவு 10.30 முதல் அதிகாலை 5.30 வரை பயன்படுத்தப்படும் மின்சார அலகு ஒன்றிற்கு 13 ரூபா அறவிடப்படவுள்ளது.
மேலும், அதிகாலை 5.30 முதல் மாலை 6.30 வரை பயன்படுத்தப்படும் மின்சார அலகு ஒன்றிற்கு 25 ரூபா அறிவிடப்படவுள்ளது.
அத்துடன், மாலை 6.30 முதல் இரவு 10.30 வரை பயன்படுத்தப்படும் மின்சார அலகு ஒன்றுக்காக 54 ரூபா அறிவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மின் பாவணை இடம்பெறும், மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், மின்சார பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, புதிய மின்கட்டண முறைமை அறிமுக்கப்படுத்தப்படுவதன் ஊடாக, நுகர்வோருக்கு மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என மின்சார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்