சென்னை இராமேச்சரம் முள்ளிவாய்க்கால் நீத்தார் வழிபாடு.

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

வைகாசி, தேய்பிறை, எட்டாம், ஒன்பதாம் பத்தாம் நாள்கள், அவிட்டம், சதயம், பூரட்டாதி விண்மீன் கூடிய நாள்கள்.

திருவள்ளுவர் ஆண்டு 2040 வைகாசி மேற்காணும் நாள்களே (17, 18, 19.05.2009) போர்க்களத்தில் பல இலட்சம் தமிழர் உயிர் நீத்த நாள்கள்.
நீத்தார் வழிபாடு, வீரர் நடுகல் என்பன 5000 ஆண்டுகாலத் தொன்மையான, இடையீடின்றித் தொடர்கின்ற, அடுத்து எழுகின்ற தலைமுறைகளால் தொடரவுள்ள தமிழர் வழமை.
இலங்கைச் சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலாளர் இராம இரவிக்குமார் மயிலாப்பூரில் அருள்மிகு கபாலீச்சரர் கோயிலில் வைகாசி, தேய்பிறை, எட்டாம் நாளில் (18.05.2017) போர்க்களத்தில் உயிர் நீத்த பல இலட்சம் தமிழருக்காக நீத்தார் வழிபாடு செய்தனர்.
நூற்றுக்கணக்கான சிவ அடியார்களும் தொண்டர்களும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர் தலைமையில் கூடினர். வழிபாட்டில் பங்கேற்றனர். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் வழிபட்டார்.
அதே காலத்தில் இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் வடக்கே காசியில் கங்கைக் கரையிலும் தமிழ்நாட்டில் இராமேச்சரத்திலும் சீர்காழியிலும் மதுரையிலும் தஞ்சாவூரிலும் கும்பகேணத்திலும் கோயம்புத்தூரிலும் நீத்தார் வழிபாடு செய்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்