நான் பச்சைத் தமிழன்- மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய ரசிகர்களை சந்தித்துள்ளார். மாவட்ட வாரியாக பிரித்து ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.

கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் மீண்டும் பேசியுள்ளார். அவர் பேசும்போது, எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன்.

கர்நாடகத்தில் இருந்து மராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்.

என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்