லண்டனில் இந்திய உணவகம் ஒன்றில் மனித இறைச்சி: பொய்யான செய்தி என்கிறார் உரிமையாளர்

அதிசய உலகம்

What are they doing?

மேலும்..

தமது உணவகத்தில் மனித இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என “கர்ரிடுவிஸ்ட்” உணவகத்தின் உரிமையாளர் ஷின்ரா பேகம் கவலை வெளியிட்டுள்ளார்.

லண்டனில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமது உணவகம் 60 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது எனவும் இது போன்ற தவறான செய்திகள் மூலம் தமது வியாபாரம் குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், தன்னை சிலர் மனித இறைச்சியை பயன்படுத்துவீர்கள் என்று கேள்வி எழுப்புவதாகவும் தமது உணவகத்தை மூடுமாறு வலியுறுத்துடன் உணவகத்தை உடைப்போம் என அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

இதேபோல, சிலர் உணவகம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஷின்ரா பேகம் கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்