தினகரன் – தரகர் சுகேஷின் குரல் மாதிரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு

அதிசய உலகம்

What are they doing?

மேலும்..

இரட்டை இலை சின்னத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் மற்றும் தரகர் சுகேஷ் சந்திரா ஆகியோரின் குரல் மாதிரிகளை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினகரனும், தரகர் சுகேஷூம் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவு ஆதாரம் அமுலாக்கத்துறை வசமுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் உண்மை தன்மையை அறியவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தினகரன் ரூ.50 கோடி இலஞ்சம் கொடுத்ததாக டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா என்பவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து தினகரன் கைது செய்யப்பட்டார்.

டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்