9 மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்கள்! – 2019 இல் நடத்தும் வகையில் அரசமைப்பை திருத்த அரசு முயற்சி.

அதிசய உலகம்

funny guy

மேலும்..
இலங்கையில் உள்ள சகல மாகாண சபைகளுக்குமான ஆட்சிக்காலத்தை 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையில் நீடித்து, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் தகவலை வடமத்திய மாகாணத்தின் புதிய அமைச்சர் சுசில் குணரத்ன வெளியிட்டுள்ளார்.
இதற்காக வேண்டி அரசமைப்பின் 17 ஆவது சரத்தை திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு ஆகிய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம்  இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
மத்திய, வடக்கு, வடமேல் மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த வருடம் செப்டெம்பர்  மாதம்வரை இருக்கின்றது.
ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படவேண்டிய காலஎல்லை 2019 செப்டெம்பர் மாதமாகும். எனவேதான், மாகாண சபைத் தேர்தலை ஒரேடியாக நடத்தும் திட்டத்தில் அரசு இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்