யுத்தத்தின் போது பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை

அதிசய உலகம்

some college rules

மேலும்..

எஸ்.என்.நிபோஜன்

இறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால்  இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தின்போது பலியான உறவுகளை நினைந்து சுடரேற்றுவோம்

அவர்களின் கனவுகளை மனதெடுத்து

இந்த மண்ணின் மனிதர்களுக்கு வாழ்வளிப்போம்  என்ற அடிப்படையில்

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு   இவ்வருடமும்  யுத்த காவலத்தில் இறந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளது. இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் பொதுச் சுடரேற்றியதனை தொடர்ந்து ஏனையவா்களாலும் சுடர்கள் ஏற்றப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள்  அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினருமான  மு. சந்திரகுமார் உள்ளிட்ட   நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்