வீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை!

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..

வீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை! மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசான். விவசாயி. இவரது மகள் லதா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து ஊரைச் சேர்ந்த ஆனந்த் குர்மி என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.

திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணம், நகைகளை ராம்கிசான் கொடுத்தார். திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு லதாவை அவரது கணவரும், குடும்பத்தாரும் சித்ரவதை செய்ய தொடங்கினர்.

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர். கட்டாயப்படுத்தி கர்ப்பத்தையும் கலைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரதட்சணை கொடுமை உச்சகட்டத்தை எட்டியது. லதாவை ஆடு, மாடுகளுடன் அடைத்து வைத்தனர். கணவர், மாமனார், கணவரின் சகோதரர்கள், மற்றும் உறவினர் வீட்டு ஆண்கள் என பலர் லதாவை 3 ஆண்டுகளாக கற்பழித்தனர். பல நேரங்களில் உணவு கொடுக்காமல் பட்டினி போட்டனர். ஒரே நாளில் இரண்டு, மூன்று பேர் லதாவை கற்பழித்தனர். இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு லதா பக்கத்து ஊரைச் சேர்ந்த பணக்காரர் ஒருவருக்கு ரூ. 50,000/- க்கு விற்கப்பட்டார்.

இதுபற்றி லதாவின் தந்தை ராம்கிசான் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும், ஒரு தொண்டு நிறுவனத்தினரும் லதாவை பணக்காரரிடம் இருந்து மீட்டனர். லதாவின் கணவர் ஆனந்த் குர்மி அவரது உறவினர்கள் 9 பேர் மீது கற்பழிப்பு மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்