ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கான அழைப்பு இன்றியமையாதது: பிரெக்சிற் அமைச்சர்

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..

சுதந்திர உலகின் முன்னணி நாடாக விளங்கும் அமெரிக்க ஜனாதிபதியை பிரித்தானியாவிற்கு அழைப்பது மிக முக்கியமாகும். ஆனால் அவர் எப்போது விஜயம் செய்வார் என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் என பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க விஜயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ட்ரம்பின் அரசியல் மற்றும் அவரது ஏனைய செயற்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாத வகையில் காணப்படினும், அதற்கு அப்பால் உலகின் முன்னணி நாடாக திகழும் அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற வகையில் அவரை நாட்டுக்கு அழைப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

கொன்சவேற்றிவ் கட்சி ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கின்ற நிலையில் அக்கட்சியின் கருத்துக்களுடன் ஒன்றித்து செயற்படுவது குறித்து வினவியபோது, “நாம் எமக்கு ஆதரவாக செயற்படுமாறே ஜனநாயக ஒன்றியக் கட்சியை கோரியுள்ளோம். மாறாக அவர்களின் கொள்கைகளை நாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை.

ஜனநாயக கட்சியுடன் நம்பிக்கை அடிப்படையில் உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதே தவிர, கூட்டணியாக இணைந்து எமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை” எனவும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்