வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

அதிசய உலகம்

super dance

மேலும்..
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையைக் கண்டித்தும் முதலமைச்சரின் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்திற்கு செல்லாது தமது பணிப்புறக்கணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் சட்டதரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கங்காதரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட அமைச்சர்கள் பிழை செய்தார்களா, இல்லையா என்பது விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். அது பற்றி நாம் எதுவும் கூற முடியாது. ஆனால் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒரு முறையற்ற செயல். இதனை சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் வன்மையான கண்டிப்பதுடன், அதனை தமிழரசுக் கட்சியினர் மீளப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குகளுக்கு சார்பாக ஆயராகாது இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்