நாங்கள் ஆட்சி செய்யத்தெரியாதவர்கள் என்பதை மீண்டும் நிலை நிறுத்தப்போகின்றோம்.-பா.டெனிஸ்வரன்(photos)

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..
நீதியினை சரியாக முதலமைச்சர் பின்பற்றவில்லை என்பதே தற்போதுள்ள பிரச்சினை.ஒரு நீதியரசராக இருந்து கொண்டு நீதியினை சரியாக வழங்காமல் நடு நிலைமையில் இருந்து தவரி விட்டார் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,
-மக்கள் தற்போதுள்ள பிரச்சினைகளை சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும்.இதற்குப்பின்னால் அரசியல் இலாபம் தேடுவதற்காக பலர் இருக்கின்றார்கள்.
-வடக்கு அமைச்சர்கள் நான்கு பேரையும் மாற்ற வேண்டும் என ஊடகங்கள் மூலமாக செய்திகள் வெளி வந்த போது எனக்கு பின்னால் உள்ள மக்கள் கேட்ட விடையம்,பொது அமைப்பினர் கேட்ட விடையம் ஒரு நீதியரசர் இவ்வாறு செய்வது. பிழை எனவே முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நீதி கேட்கப்போகின்றோம் என்று கேட்டார்கள்.
-நான் அனைவரிடமும் கூறிய ஒரு விடையம்.தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்ந்த விடையம்.வீதிகளில் இறங்கி நின்று போராடி சண்டையிடுவோமாக இருந்தால்  தென்பகுதியில் உள்ளவர்கள் கடந்த காலங்களில் கூறியது போல் தமிழர்களுக்கு தனி நாட்டை அல்லது ஈழத்தை கொடுப்போம் என்று சொன்னால் அவர்கலே தமக்குள் சண்டை பிடித்து விட்டு எங்களிடம் கையளித்து விடுவார்கள் என்றார்கள்.
நாங்கள் ஆட்சி செய்யத்தெரியாதவர்கள் என்பதை மீண்டும் நிலை நிறுத்தப்போகின்றோம்.உறுதிப்படுத்த போகின்றோம்.
-எனவே தற்போதுள்ள பிரச்சினையை யாராக இருந்தாலும் சரியாக இனம் கண்டு யார் பிழை விட்டிருந்தாலும் அதனை சீர் செய்ய வேண்டும்.
-வடக்கு முதலமைச்சர் மதிப்பிற்குரியவர்.இது வரை காலம் நாங்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட்டோம்.ஆனால் தற்போது பல விடையங்கள் காணப்படுகின்றது.
இந்த விசாரiனைக்கு அப்பால் நான் சில விடையங்களை கூற முடியும்.  இதற்குப்பின்னரும் பல பிரச்சினைகள் எழும் என்று சொன்னால் நிச்சையமாக அந்த விடையங்களை மக்களுக்கு கூறுவதற்கு தயங்க மாட்டேன்.
எங்களுடைய தலைவர்கள் இவ்வாறு தான் இருக்கின்றார்கள் என்பதினை தெழிவாக ஆராய்ந்து கூறுவதற்கு தயாராக இருக்கின்றேன்.
அந்த விடையங்கள் வெளியில் வருமாக இருந்தால் இவர்கள் நாளை அந்த பதவியில் இருப்பது என்பது ஒரு கேள்விக்குறியாக காணப்படும்.அவ்வளவு விடையங்கள் இடம் பெற்றுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும்.தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்ற நான்கு கட்சிகளும் தமது அரசியல் சுய இலாபங்களுக்காக இயங்காது பொது மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும்.
கட்சிகள் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஜனநாயக கொள்கை. ஆனால் எத்தனை ஆயிரம் போராளிகளையும்,பொது மக்களையும் பலி கொடுத்துள்ளோம்.எனவே முன்னையவர்கள் கண்ட கனவுகளை நினைவாக்க வேண்டும்.
-எனவே தனிப்பட்ட கட்சி அரசியலை விட்ட எல்லோறும் ஒரே விடையத்திற்கு வர வேண்டும்.எங்களுடைய அரசியல் இலக்கு என்ன? எங்களுடைய உரிமை சார்ந்த விடையத்திற்கு என்ன செய்யப்போகின்றோம்? அதனை எவ்வாறு பெற்றுக்கொள்ளப்போகின்றோம் என்பதற்காக அனைவரும் ஒரு பாதையில் சரியாக நகராது விட்டால் எங்களை நம்பி உயிர்த்தியாகம் செய்த அனைவரும் துரோகம் செய்து விட்டதாகவே அமையும் என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்