என் மூச்சு நின்று விடும் ! விஜயின் அப்பா உணர்ச்சிவசம்

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..

இளையதளபதி விஜய்க்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். விரைவில் வரப்போகும் அவரது பிறந்த நாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை இன்று அவருக்கு சென்னையில் வழங்கியது.

இதில் பேசிய அவர் 40 வருடங்களுக்கு முன்னால் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினேன். இன்று இந்த உயரத்தை அடைந்திருக்கிறேன். காரணம் உழைப்பு தான்.

கடவுள் கைவிடலாம். உழைப்பு கைவிடாது. விஜய்யின் இந்த உயர் நிலைக்கும் காரணம் உழைப்பு மட்டுமே. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் என் பிள்ளைகள் தான்.

அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது உங்கள் தாயை நேசியுங்கள். விஜய் எப்படியான சூழ்நிலையிலும் அம்மவிடம் பேசாமல் இருக்க மாட்டார். முடிந்த தொண்டை நீங்கள் செய்யுங்கள்.

தொண்டனாக இருப்பவரால் மட்டுமே முதல்வராக முடியும். கடைசிவரை உழைக்க வேண்டும். உழைப்பு நின்றால் என் மூச்சு நின்று விடும் என அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்