தமிழக மீனவர்கள் மூவர் கடற்படையினரால் மீட்பு

அதிசய உலகம்

famers Struggle

மேலும்..

இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மூவரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இது குறித்து இலங்கை கடற்படை இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கடற்பரப்பின் 18 கடல் மைல் தூரத்தில் படகு ஒன்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்ததை அறிந்த இலங்கை கடற்படையினர், அங்கு சென்று குறித்த படகை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

குறித்த படகு நீர் நிறைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, படகில் இருந்த மூன்று மீனவர்களையும் வெளியேற்றி ‘மோட்டார் பம்பு’ மூலம், படகில் இருந்த நீரை அகற்றி படகில் ஏற்பட்ட துவாரத்தை சீர் செய்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மூன்று மீனவர்களையும் வேறு ஒரு படகில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ததுடன் படகை கொண்டு செல்வதற்கான உதவிகளையும் இலங்கை கடற்படை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்