லிந்துலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயம்.

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..

(க.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை தோட்டத்தின் வெள்ளி மலை பிரிவில் 18.06.2017 அன்று இரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டின் முன் வாசலில் கிடந்த பொதி ஒன்றினை கத்தி ஒன்றினால் தள்ளியபோது பொதியினுள் காணப்பட்ட வெடி பொருள் வெடித்து காயமடைந்துள்ளார்.

இதேவேளை அப்பகுதியில் பன்றி ஒன்றும் வெடிபொருளினால் வெடித்து உயிரிழந்துள்ளது. குறித்த பிரதேசத்திலிருந்த வெடித்து சிதறிய வெடிபொருட்களை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் இந்த வெடிபொருட்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என விசாரனைகளை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்