ஸ்பெயின் அரச தம்பதியினரின் வருகை பிரெக்சிற் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்தும்

அதிசய உலகம்

Original bhakupali

மேலும்..

ஸ்பெயின் அரச தம்பதியினரின் பிரித்தானிய விஜயம், இரு நாடுகளுக்கும் இடையே பிரெக்சிற் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் என நம்புவதாக பிரித்தானிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின் அரச தம்பதியினரின் பிரித்தானியாவிற்கான உத்தியோப்பூர்வ விஜயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் மற்றும் மகாராணி லெடிஸியா ஆகியோர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு விஜயம் செய்கின்றனர்.

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யும் ஸ்பெயின் அரச தம்பதியினரை எலிசபெத் மகாராணி மற்றும் எடின்பேர்க் கோமகன் பிலிப் ஆகியோர் வரவேற்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மன்னர் ஃபெலிப்பின் தந்தை பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், அதனை தொடர்ந்து 31 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்பெயின் அரச தம்பதியர் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்