விசாரணை நடவடிக்கைகளுக்காக விமான பாகங்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

ஒன்ராறியோவின் ஒறில்லியா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக அதன் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம் நீரினுள் முற்றாக மூழ்கிவிட்ட நிலையில், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் விஷேட படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பில் கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அதிகாரிகளும் இந்த விசாரணை நடவடிக்கையில் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) சென் ஜோன் பிராந்திய விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஏரி ஒன்றில் தரையிறங்க முற்பட்ட வேளையில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதில் பயணித்தவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்