சரித்திரத்தில் முதன் முறையாக வாட் வரி விதிப்பு: சவுதி அரேபியா!

சவுதி அரேபியா :சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு அரபு நாடுகளில் முதன் முறையாக வாட் மற்றும் சின் டேக்ஸ் விதிக்கப்பட்டுள்ளது.

வாட் என்று கூறப்படுவது விற்கப்படும் பொருட்களின் மேல் விதிக்கப்படும் வரி ஆகும். இது மறைமுக வரி எனவும் கூறப்படுகிறது. இந்த வாரியானது அதிகபட்ச விலையின் மேல் விதிக்கபடுகிறது.

சின் டேக்ஸ் என்பது சமுதாயத்திக்கு அபாயம் விளைவிக்க கூடிய பொருள்கள் எனக் கருதப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படுவது.

மேலும் உதாரணமாக புகையிலை, மது, ஊக்க பானம், சாஃப்ட் ட்ரின்க்ஸ், சூதாட்டம், துரித உணவுகள் போன்றவை.

இதுவரை இல்லாமல் சரித்திரத்தில் முதல் முறையாக ஆறு அரபு நாடுகளில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரெபியா, பெஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு தேசம் ஆகிய நாடுகளில் ஜனவரி 1, 2018 முதல் இந்த வரி விதிப்பு அமுலுக்கு வருகிறது.

மேலும் அந்நாடுகளில் கடத்தலை தடுக்கவே வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாட் 5% விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் கல்வி, சமூக சேவைக்கான உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதாரம், 95 வகை உணவு வகைகள் போன்றவற்றிற்கு வாட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்நாட்டில் வருமான வரி மற்றும் சொத்து வரி போன்றவை கிடையாது. எனவே இந்த வாட் மற்றும் இதர வரிகள் அந்த நாட்டுக்கு வருமானத்தையே கொடுக்கும்.

சவுதியில் தற்போது கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் உருவான வருமானக் குறைபாட்டை இந்த வரிகள் ஈடு செய்யும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்