வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கபட்ட உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பு

அதிசய உலகம்

Original bhakupali

மேலும்..
 வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரவுக்குட்பட்ட யுத்தத்தின் போது கணவனை இழந்த முல்லைத்தீவு மாவட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்கின் ஒன்றியத்தை சேர்ந்த 50 பிள்ளைகளுக்கும் முள்ளியவளையில் கடந்தகால யுத்தத்தின் போது தமது உறவுகளை இழந்த 110 பெண் சிறார்களை பராமரித்து வரும் பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்க்கும் அவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உறுதுணையாக கற்றல் உபகரணங்களும் மற்றும் புதக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரிவுக்குட்பட்ட யுத்தத்தினால் கணவனை இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 5 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் அன்பளிப்பாக வழங்கபட்டு;ளன.
மேற்படி பாரதி இல்ல சிறார்களுக்கான நிகழ்வு முள்ளியவளை பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திலும் கடந்த கால யுத்தத்தின்போது கணவனை இழந்த முல்லைத்தீவு மாவட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தை சேர்ந்த பயனாளிகளுக்கான நிகழ்வு தேவிபுரம் இனிய வாழ்வு இல்லத்திலும் நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்