கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நான்கு ஈழ தமிழர்கள் விடுதலை

அதிசய உலகம்

Jolly tutorial training

மேலும்..

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த வடக்கைச் சேர்ந்த நான்கு தமிழர்கள் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமல்ராஜ் அந்தசாமி, ஜெயசந்திரன் கனகராஜ், பிரான்சிஸ் அந்தோனிமுத்து, விக்னராஜா தேவராசா ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு எம்.வி.ஓஷியன் லேடி என்ற கப்பல் மூலம் 76 இலங்கை தமிழர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்ற சம்பவத்தை மையப்படுத்தி அவர்கள் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு கனேடிய உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த நால்வர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க அரச தரப்பு சட்டத்தரணி தவறியதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த நால்வரும் ஆட்கடத்தல்காரர்கள் இல்லை எனவும், அவர்கள் புகலிடம் கோரிய ஈழத்து அகதிகள் எனவும் அந்த நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்