ரொறொண்டோ பொலிஸ் விடுத்திருக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை

அதிசய உலகம்

local excellent dance

மேலும்..

கடந்த 3 நாட்களாக ரொறொண்டோவின் டவுன்ரவுண் பகுதியில் வென்ரநில் மாத்திரைகளுடன் தொடர்புடையதான உயிரிழப்புக்கள் நான்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரொறொண்டோ பொலிஸார், பாதுகாப்பு எச்சரிக்கையினை விடுத்துள்ளார்கள்.

கடந்த வியாழக்கிழமையில் இருந்து இதுவரை 4 உயிரிழப்புக்களும் வென்ரநில் மாத்திரைகளுடன் தொடர்புடையதான 20 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக கடந்த சனிக்கிழமை பெண்ணொருவர் Queen St. E and Trefann St பகுதியில் மாடிப்படியொன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை 27 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்திருந்தான்.

குறித்த வென்ரநில் கலந்த ஹெரோயின் போதை மாத்திரைகளானவை சாதாரண ஹெரோயினையும் விட 50 மடங்கு அபாயகரமானது எனக்குறிப்பிடப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்